

தமிழ்நாட்டில் இயங்கும் பாசஞ்சர் ரயில்களுக்கான எண்களை மாற்றி தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகம், தனது எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் பயணிகள் ரயில்களின் எண்களை அவ்வப்போது மாற்றம் செய்வது வழக்கம். அதன்படி புத்தாண்டான வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் நெல்லையில் இருந்து செங்கோட்டை மற்றும் திருச்செந்தூர், வாஞ்சி மணியாச்சி செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 26 பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்களின் விவரங்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயிலுக்கு 56727 எண்ணுக்குப் பதிலாக 56751 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் எண் 56729 என்ற எண் 56753 என்ற புதிய எண்ணோடு இயக்கப்பட உள்ளது. வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலுக்கு 56731 என்ற எண் 56755 என்ற புதிய எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் - திருநெல்வேலி(56728) என்கிற ரயிலுக்கு 56752 என்ற எண்ணும், திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி (56732 ) ரயிலுக்கு 56756 என்ற எண்ணும், திருச்செந்தூர் - திருநெல்வேலி (56730) ரயிலுக்கு 56754 என்ற எண்ணும், திருச்செந்தூர் - திருநெல்வேலி (56734 ) ரயிலுக்கு 56758 என்ற எண்ணும், திருச்செந்தூர்- வாஞ்சிமணியாச்சி (56723) ரயிலுக்கு 56760 என்ற எண்ணும், மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் (56719) ரயிலுக்கு 56771 என்ற புதிய எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை டூ திண்டுக்கல், திண்டுக்கல் டூ மதுரை, கண்ணூர் டூ மங்களூரு சென்ட்ரல், மங்களூரு சென்ட்ரல் டூ கண்ணூர், திருவாரூர் டூ காரைக்குடி, காரைக்குடி டூ திருவாரூர், திருவாரூர் டூ பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை டூ திருவாரூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன.
ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரயில் எண்களைக் கவனத்தில் கொள்ளுமாறும், NTES / UTS போன்ற ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளில் ரயில் எண்களைச் சரிபார்க்குமாறும் தென்னக ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.