

தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு, வரும் ஜன.2 ஆம் தேதி முதல் நாள்தோறும் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.
லடாக்கில், இந்தியா மற்றும் சீனா இடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகளைத் தொடர்ந்து இருநாடுகளின் நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உறவுகளை மேம்படுத்துவது குறித்து சீனா மற்றும் இந்தியாவின் அரசுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தலைநகர் தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு வரும் ஜன.2 ஆம் தேதி முதல் நாள்தோறும் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (டிச. 18) தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, சேவைகள் தொடங்கப்பட்டது முதல் தில்லி மற்றும் ஷாங்காய் இடையில் வாரம் 3 முதல் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நாள்தோறும் விமானங்களை இயக்குவதற்கு சீன நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.