

இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் பதிவிட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவில் அமெரிக்காவுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். மேலும், நமது நாடுகள் ஏற்கெனவே பகிர்ந்து வரும் பிணைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம் என்று ஜே.டி. வான்ஸ் கூறியதைப் பதிவிட்டுள்ளனர்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்த நிலையில், மீண்டும் இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவுடனான நட்புறவு குறித்து அமெரிக்க தூதரகம் பதிவிட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.