விஜய் பிரசாரம்: கோவை விமான நிலையத்துக்குள் நுழைய தவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, தமிழகத்தில் முதல்முறையாக விஜயமங்கலம் அருகே திறந்தவெளி பிரசாரக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இன்னும் சற்றுநேரத்தில் கோவை விமான நிலையத்துக்கு தவெக தலைவர் விஜய் வருகை தரவுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விஜயமங்கலம் அருகே கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு கார் மூலம் பயணிக்கவுள்ளார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் விஜய்யைக் காண அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் காலை முதலே குவிந்து வருகின்றனர். இதையடுத்து, தடுப்புகள் அமைத்து, கயிறுகள் கட்டி ரசிகர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
மேலும், விமான நிலையத்துக்கு வெளியே தடுப்புக்கு பின்பு நின்று மட்டுமே விஜய்யைக் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விமான நிலையத்துக்குள் நுழைந்த தொண்டர்களை மத்திய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.