

திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கரூர் நெரிசல் பலி சம்பவத்திற்குப் பின்னர் தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என்றெல்லாம் விஜய் பேசினார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி, "விஜய்யிடம் இதேபோல என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா? விஜய்யை ஒருமுறை பேச விடுங்கள். அப்போது தெரியும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் பேசும் தவெக தலைவர் விஜய், இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதில்லை என மற்ற கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினும் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.