

கோவை, திண்டுக்கலில் வரைவு வாக்காளர் பட்டியலில் 9.74 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 10 தொகுதிகளைக் கொண்ட கோவை தொகுதியில் இருந்து 20.17 சதவிகித வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 32,25,198 வாக்காளர்களில் 6,50,690 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, 25,74,608 பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1,19,489 பேர் இறந்த வாக்காளர்களாகவும், முகவரி இல்லாதவர்கள் 1,08,360, குடிபெயர்ந்தோர் 3,99,159 பேர், இரட்டைப் பதிவுகள் 23,202 பேர் என மொத்தம் 6,50,590 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.