

பழைய செய்திகளைப் படித்துவிட்டு விஜய் குற்றச்சாட்டு வைக்கிறார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நல குழு சார்பில் 35 வயதிற்கு குறைந்த இளைஞர்கள் 48 நபர்களை திமுகவில் இணைக்கும் விழா, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எஸ்.ஐ.ஆருக்கு பணியாற்றியது போலவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உள்ள நிலையில் தீவிரமாக பணியாற்றி நீக்கப்பட்டது யார், எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பது விவரங்கள் குறித்து சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது என த.வெ.க தலைவர் விஜய் கூறுவது வருத்தமளிக்கிறது. 2017-2018 ஆம் ஆண்டில்தான் தமிழ்நாட்டில் பள்ளி இடைநீற்றல் வீதம் அதிகமாக இருந்தது. அப்போதைய கல்வி அமைச்சர் தற்போதைய த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன்தான்.
தற்போது திமுக ஆட்சியில் அது குறைந்து 7.7 சதவீதமாகத்தான் உள்ளது. பழைய செய்திகளைப் படித்துவிட்டு விஜய் குற்றச்சாட்டு வைக்கிறார். குற்றச்சாட்டு வைக்கும் முன் விஜய் அப்டேட் ஆக வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.