

தைவானின் தலைநகரமான தைபேயில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவல்களின்படி, நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தைபே பிரதான சுரங்கப்பாதை நிலையத்தில் சந்தேக நபர் புகை குண்டுகளை வீசியுள்ளார்.
பின்னர், அந்த சந்தேக நபர் சுரங்கப்பாதையில் பயணித்து, நிலையத்திலிருந்து வெளியேறியேறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து, அந்த வழியாக சென்றவர்களைக் குத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
சந்தேக நபர் பல்பொருள் அங்காடிக்குள் ஓடுவதையும் காட்சிகள் காட்டுகின்றன.
இதனிடையே சம்பவ இடத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் எந்தவித அசைவின்றி காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம், தாக்குதல் குறித்து போலீஸார் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.