

சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அவர் சனிக்கிழமை சென்னை வருகை தந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், கரு. நாகராஜன், குஷ்பு மற்றும் புதுச்சேரி பாஜகவினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு சென்றார்.
அங்கு இன்றும் நாளையும் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.