

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றதில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் திமுக - தவெக இடையேதான் போட்டி என்று விஜய் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கையில், "இதுவரையில் எந்தத் தேர்தலிலும் தம்பி (விஜய்) போட்டியிடவில்லை. தற்போது எங்கள் அண்ணனும் (செங்கோட்டையன்) அங்கு இணைந்துள்ளார். தவெகவில் நிறைய பேர் இணையவுள்ளனர் எனக் கூறும் செங்கோட்டையனின் நிலை - பாவம்.
திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றதில்லை. 1972-ல் கட்சி தொடங்கிய எம்ஜிஆர், உயிரோடு இருந்தவரையில் அவர்தான் முதல்வர்.
எம்ஜிஆர் இறந்தபிறகு, கட்சி இரண்டாகப் பிரிந்ததால்தான், திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிரிந்த கட்சியினர் சேர்ந்திருந்தால், ஆட்சியைப் பிடித்திருப்பர்.
1989-ல் மதுரை கிழக்கில் மருங்காபுரி இடைத்தேர்தலில், ஜெயலலிதா பிரசாரத்துக்குச் செல்லாமலே 26,000 வாக்குகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆகையால், திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை.
தற்போதுகூட, கடந்த முறை சிறு தவறால் ஆட்சிக்கு வந்து விட்டனர். ஆட்சிக்கு வந்து, ரூ. 50,000 கோடிக்கும்மேல் கொள்ளையைடித்துவிட்டு, மீடியாக்களையும் தன் கைவசம் வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.