அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

திமுக அரசு அராஜக ஆட்சியை நடத்தி வருவதாக பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு
மத்திய இணை அமைச்சா் எல். முருகன்
மத்திய இணை அமைச்சா் எல். முருகன்கோப்புப் படம்
Updated on
1 min read

திமுக அரசு அராஜக ஆட்சியை நடத்தி வருவதாக பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் எல். முருகன் பேசுகையில், "பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படவில்லை. இறந்த வாக்காளர்கள், இரட்டை இடங்களில் வாக்காளர்களைச் சரிசெய்யும் பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அதைத்தான் அவர்கள் செய்கின்றனர்.

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் விருப்பமே. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே திமுக எதிர்க்கிறார்கள்.

திமுக பொய்யான வாக்குறுதிகளை 2021 தேர்தலில் அறிவித்தனர். அவர்கள் சொன்ன வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கக் கூடிய அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.

திமுக அரசு, ஏழை எளிய மக்களின் நலன்களில் கவனம் கொள்ளாவில்லை, ஆசிரியர்கள் -செவிலியர்களின் நலன்களில் கவனம் இல்லை. துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தாக்கி சிறையில் அடைக்கும் ஒரு அராஜக ஆட்சியை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அவர்களின் வீட்டுக்குச் செல்ல தயாராகிக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

Summary

DMK will go home in April: BJP Leader L.Murugan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com