எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் குறுக்குவழியில் வெல்ல பாஜக அரசு முயற்சிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் குறுக்குவழியில் வெல்ல பாஜக அரசு முயற்சிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சிறப்பு தீவிர திருத்தத்தில் ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (டிச., 21) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனையின்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் உள்ளார்களா? என கவனமாக பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

168 தொகுதிகளில் 10%க்கும் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டதை வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் படிவங்களை சரியாக பயன்படுத்தி சேர்த்தல், நீக்குதல் செய்வதை மேற்பார்வையிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நம்மை வீழ்த்த முடியாத பாசிச சக்திகள் குறுக்கு வழியில் சாதிக்க நினைப்பார்கள், அதற்கு கடுகளவும் இடம்தரக் கூடாது எனக் குறிப்பிட்ட முதல்வர், புதிய வாக்காளர்கள் இணைப்பை கவனித்து போலிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாக்குச்சாவடி வாரியாக மைக்ரோ லெவலில் மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருப்பதாகக் கூறிய அவர், புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில - மாவட்ட நிர்வாகிகள் முதல் ஒவ்வொரு அணியினரும் பம்பரமாய் உழைத்தீர்கள்

என்றும், டிச. 29 ஆம் தேதி திருப்பூர் மகளிர் அணி மாநாடு, அடுத்த கட்டமாக இளைஞரணி மாநாட்டையும் சிறப்பாக நடத்த வேண்டும் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மு.க. ஸ்டாலின்
ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!
Summary

Attempting to win through a shortcut via SIR: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com