

வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
2026ஐ வரவேற்போம். புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகின்ற டிச. 29 ஆம் தேதி திங்கள்கிழமை சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பா.ம.க., வ.ச., ச.மு.ச. உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகரப் பகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும். மாநில செயற்குழு கூட்டம் டிச. 29 ஆம் தேதி காலை 10.00 முதல் 11.30 மணி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் 11.40 மணி முதல் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.