நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை மீண்டும் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள் என்னென்ன?
Voter ID cards found in bag in Mumbra
வாக்காளர் அடையாள அட்டை (கோப்புப்படம்)
Updated on
1 min read

சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை மீண்டும் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்

அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து பெயர் நீக்கப்பட்டவர்கள், முகவரி மாறியவர்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பித்தனர்.

முகாமுக்கு செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் மற்றும் Voter Helpline App செயலியில் விண்ணப்பிக்கலாம்.

வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இதேபோல தொகுதிக்குள் இடம் பெயர்ந்தவா்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவர்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆதாரத்துடன் படிவம் 8 ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

12 ஆவணங்கள் எவை?

பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), மத்திய, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை, 1987- க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞசல் அலுவலகம், எஸ்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் ஆகியவற்றில் ஒன்றை அளித்து பெயரைச் சேர்க்கலாம்.

Voter ID cards found in bag in Mumbra
சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!
Summary

What are the 12 documents required to reinstate the names of deleted voters?

Summary

What are the 12 documents required to reinstate the names of deleted voters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com