

தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில் இன்று சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்துள்ளது.
நேற்று(திங்கள்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ. 720 உயர்ந்தது. அதாவது நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 1,360 அதிகரித்து ரூ.1,00,560- க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்து ரூ. 1,02,160-க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 12,770-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை இது புதிய உச்சமாகும்.
முன்னதாக கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,00,120 ஆக உயர்ந்து பின்னர் குறைந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 234 - க்கும், கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,34,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.