

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"கோவையில் உள்ள அமைச்சர்களுடன் கலந்து பேசி தேதி குறித்துவிட்டு இங்குள்ள நிர்வாகிகள், தொழில்துறையினருடன் சந்திப்பு நடத்துவோம். பல்வேறு தரப்பினர், மக்களின் கருத்துகளைக் கேட்டுதான் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் எதிர்பார்ப்பு.
மக்களின் தேவை என்ன என்பதை கேட்டறிந்து எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக சேர்க்கவிருக்கிறோம். தேர்தல் அறிக்கை என்பது எண்ணிக்கைகளாக இருக்காது.
அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் சிலர் பொய்யான விமர்சனங்களை முன்வைப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான நிலவரம் என்ன என்று ஊடகத் துறையைச் சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் தெரியும். இதற்கு மேல் விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வாக்கு வங்கி பற்றிய கேள்விக்கு, எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பது தேர்தல் முடிந்தபிறகே தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பதவியில் தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.