பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை பொருநை அருங்காட்சியகம்.
நெல்லை பொருநை அருங்காட்சியகம்.
Updated on
1 min read

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட தொல்லியல் துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை சீமைக்கும், பொருநை நாகரிகத்துக்கும் புகழ் சேர்க்கும் வகையில் ரூ.67.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு இன்று (டிச.23) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10, மாணவர்களுக்கு ரூ. 5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வையிட காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருநை அருங்காட்சியகத்துக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The fee details for visiting the Porunai Museum have been released.

நெல்லை பொருநை அருங்காட்சியகம்.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்தது!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com