தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து!

தமிழகத்தின் குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும்.

இந்த நிலையில், 2024 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ராசிக் மற்றும் நல்லசிவன் ஆகியோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Summary

Group-1 officers in Tamil Nadu to be granted IAS status!

கோப்புப்படம்
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்தது!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com