பியூஸ் கோயல் - இபிஎஸ் பேச்சுவார்த்தை நிறைவு!

சென்னையில் நடைபெற்ற பியூஸ் கோயல் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நிறைவு...
பியூஸ் கோயல் - இபிஎஸ் பேச்சுவார்த்தை
பியூஸ் கோயல் - இபிஎஸ் பேச்சுவார்த்தை Photo: X
Updated on
1 min read

சென்னையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காலை சென்னைக்கு வருகைதந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பாஜக அலுவலகம் சென்ற அவர், பாஜக நிர்வாகிகளின் மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரம், ஓபிஎஸ் - தினகரனை கூட்டணியில் இணைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக - அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் பாஜகவின் அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன், நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் மற்றும் அதிமுகவின் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளிக்கவுள்ளார்.

Summary

TN Election 2026: Bjp's Piyush Goyal - Admk's EPS talks conclude

பியூஸ் கோயல் - இபிஎஸ் பேச்சுவார்த்தை
விஜய் காரை மறித்து தவெக பெண் நிர்வாகி போராட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com