பிக் பாஸ் வீட்டில் பூரியால் வெடித்த சண்டை! என்ன நடந்தது?

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் நடந்த சண்டை குறித்து...
பிக் பாஸ் வீட்டில் பூரியால்  வெடித்த சண்டை! என்ன நடந்தது?
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பூரி சமைக்கும்போது, கானா வினோத் மற்றும் அமித் பார்கவ் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தி செல்கின்றனர்.

இந்த வார நாமினேஷனுக்கு விஜே பார்வதி, கானா வினோத், அரோரா, விக்கல்ஸ் விக்ரம், அமித் பார்கவ், கனி திரு, திவ்யா கணேஷ், சான்ட்ரா, சுபிக்‌ஷா, சபரிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிலிருந்து, மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒருவர் அல்லது இருவர், இந்த வார இறுதியில் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமித் பார்கவ் பூரி சமைத்துக்கொண்டிருக்கும்போது, பூரி சரியாக வேகவில்லை என்று கானா வினோத் அமித்திடம் கூறுகிறார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, பேச்சுவார்த்தை முற்றி இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்படுகிறது. இது குறித்து முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரம் இன்று(டிச. 24) வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.

கானா வினோத் மற்றும் அமித் பார்கவ் நண்பர்கள்போல பழகி வந்த நிலையில், இருவரும் சண்டையிட்டதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Summary

During the preparation of puris in the Bigg Boss Season 9 show, a fierce fight broke out between Gana Vinoth and Amit Bhargav.

பிக் பாஸ் வீட்டில் பூரியால்  வெடித்த சண்டை! என்ன நடந்தது?
பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com