

அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு என வெளியாகும் செய்திகள் வதந்தி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் வதந்தி. அதனை யாரும் நம்ப வேண்டாம்.
கூட்டணியே இன்னும் அமையவில்லை, அதற்குள்ளாக 6 தொகுதிகள் ஒதுக்கியதாக கூறுவது அபத்தம்.
வதந்தியை பரப்புபவர்கள், அவர்களுக்குக் கீழ் இருப்பவர்கள் எல்லாம் யாரென்று எனக்கு தெரியும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், இந்த இயக்கத்தில் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விலைபோகாத நிரிவாகிகள் என்னுடன் இருக்கும்வரை இந்த இயக்கம் உயிரோட்டத்துடன் இருக்கும்.
அமமுகவைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்னதாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.