கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நாளை(டிச. 25) செல்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று, அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதியத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் நாளை(டிச. 25), நாளை மறுநாள்(டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Stalin is traveling to Kallakurichi to attend a government function.

முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் தொடக்கி வைத்த வால்வோ பேருந்து! புதிய வசதிகள் என்னென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com