கலைஞர் கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

வைப் வித் எம்கேஎஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தகவல்.
வைப் வித் எம்கேஎஸ்  நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.
வைப் வித் எம்கேஎஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.
Updated on
1 min read

கலைஞர் கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன் என்று வைப் வித் எம்கேஎஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடும் “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சி இன்று(டிச. 24) வெளியானது.

இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்த விடியொவை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில், “சாம்பியன் - ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!

தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன்.

Next Level Focus! இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு வீரர்கள் உடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் 14 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அப்போதிருந்தே டென்ஷன்தான். ஏதாவது பிரஷர்-ஆன நேரம்வரும்போது புத்தகங்கள் படிப்பேன். பாட்டு கேட்பேன். தொலைக்காட்சி பார்ப்பேன்.

நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்; கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன்; கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்ஷிப் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பதற்றம் இல்லாமல் கேப்டன்ஷிப் செய்வதுதான் அவரைப் பிடிக்கக் காரணம்” என்றார்.

Summary

Chief Minister Stalin provided this information during the 'Vibe with MKS' program.

வைப் வித் எம்கேஎஸ்  நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் தொடக்கி வைத்த வால்வோ பேருந்து! புதிய வசதிகள் என்னென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com