தமிழகத்தில் ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்! முதல்வர்

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டத்துக்கு எதிராக போராட்டம்...
தமிழகத்தில் நடைபெற்ற  போராட்டம்
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம்Photo: X / MKStalin
Updated on
1 min read

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த திட்டத்துக்கு முழுமையாக மத்திய அரசு நிதி அளித்து வந்த நிலையில், புதிய சட்டத் திருத்தத்தில் மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாக மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

“எம்ஜிஎன்ஆர்இஜிஏ-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!

இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The voice for Indian farmers resonates in Tamil Nadu! - Chief Minister

தமிழகத்தில் நடைபெற்ற  போராட்டம்
பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com