அன்புக்கும் கருணைக்கும் அடையாளமாகத் திகழும் இயேசுநாதர்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...
Tamil Nadu CM Stalin extends Christmas greetings
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துANI
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் உலகெங்கும் நாளை(டிச. 25) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில்,

"அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” என்ற வள்ளுவப் பெருந்தகை காட்டிய குறள் நெறியினைப் போலவே, அன்பின் வடிவாக நின்று, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்று கூறியதோடு மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர் இயேசு பெருமான்! 

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமைகளுக்காகவும், அவர்தம் வளர்ச்சிக்காவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக நமது திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. 

கழக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.

இயேசுபிரான் காட்டிய அன்பு வழி மற்றும் சகோதரத்துவம் ஆகிய  நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TN Chief Minister MK stalin wishes for christmas

Tamil Nadu CM Stalin extends Christmas greetings
2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com