வேலு நாச்சியார் நினைவு நாள்: விஜய் மரியாதை!

வேலு நாச்சியார் நினைவு நாளுக்கு தவெக விஜய் மரியாதை.
வேலு நாச்சியார் நினைவு நாள்: விஜய் மரியாதை!
Updated on
1 min read

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamizhaga Vetri Kazhagam Vijay pays tribute on Velu Nachiyar death anniversary.

வேலு நாச்சியார் நினைவு நாள்: விஜய் மரியாதை!
2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com