2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருப்பது தொடர்பாக...
செங்கோட்டையன்
செங்கோட்டையன் கோப்புப் படம்
Updated on
1 min read

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவா் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதிமுகவிலிருந்து மேலும் சிலா் விலகி தவெக-வில் இணைவாா்கள் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நடத்திய அனைத்து மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பெரும்பாலானோா் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனா். எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்து துரோகத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என ஓ.பன்னீா்செல்வம் ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துள்ளாா். இவற்றின் அடிப்படையில் அவா் விரைவில் நல்ல முடிவை எடுப்பாா்.

காங்கிரஸ் கட்சியுடன் இணையும் வாய்ப்பு உள்ளதா?

காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. "இணைய வேண்டிய இடத்தில் இணைவோம்" என்றும் கூறினார்.

கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறீர்கள்?

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்களே கோஷமிட்டு வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

பொங்கலுக்குப் பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை

பொங்கல் பண்டிகைக்கு பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை காணலாம் என்றும், அதிமுகவில் இருந்து மேலும் சிலா் விலகி தவெக-வில் இணைவாா்கள். டிடிவி தினகரனும், ஓ.பன்னீா் செல்வமும் எங்களுடன் பேசிக் கொண்டு இருப்பது உண்மைதான். அவா்கள் எப்போது முடிவை எடுப்பாா்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

அரசியல் பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறதா?

புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி காலம் போல எனது அரசியல் பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மலேசியாவில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வாா் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவா் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். தவெக கொங்கு மண்டலத்திலும் வெற்றி வாகை சூடும் என்றாா்.

Summary

No force can prevent Vijay from assuming power in 2026 says Sengottaiyan

செங்கோட்டையன்
புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com