

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் சிப்காட்டில் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.