

கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் அரசு விழாவில் பங்கேற்கச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனால் முதல்வா பயணிக்கும் வழிகள், விழா நடைபெறும் இடங்களான உளுந்தூா்பேட்டை, வீரசோழபுரம், ஏமப்பேர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் டிச.25, 26-ஆகிய இரு நாள்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.