

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 1,000 காவல் துறையினர் புதுச்சேரி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்த 500 காவலர்கள் பணியில் இருப்பார்கள். கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஷட்டர் பேருந்து மூலம் மக்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகள் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.