

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 25) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. டிச.22-இல் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கும், டிச.23-இல் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,160-க்கும் விற்பனையானது.
டிச.24-இல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, நேற்று(டிச. 25) வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,02,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 12,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
சூரிய மின் தகடு, பேட்டரிகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட மின்சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 254-க்கும், கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,54 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.