பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சவரனுக்கு மேலும் ரூ. 800 உயர்வு! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:21 pm IST

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலை ரூ. 800 உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய ஒரு சவரன் தங்கம், பின்னர் சற்று குறைந்த நிலையில் டிச. 22 மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது. அதுமுதலே நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,04, 000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை சவரனுக்கு மேலும் ரூ. 800 உயர்ந்து 1,04,800 -க்கும் கிராமுக்கு ரூ. 100 மேலும் உயர்ந்து ரூ. 13,100 -க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் இன்று காலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 274-க்கும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ. 2.74 லட்சத்துக்கும் விற்பனையானது.

தங்கம், வெள்ளி விலை இன்றும் புதிய உச்சத்தை அடைந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டை அதிகரித்து வருவதனால் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai gold and silver rate today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.