உங்களுடன் விவாதிப்பதற்கெல்லாம் நேரமில்லை: இபிஎஸ் சவாலை விமர்சித்த கனிமொழி எம்.பி.

எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்துக் கொண்டிருக்க முதல்வருக்கு நேரமில்லை என்று எம்.பி. கனிமொழி விமர்சனம்
உங்களுடன் விவாதிப்பதற்கெல்லாம் நேரமில்லை: இபிஎஸ் சவாலை விமர்சித்த கனிமொழி எம்.பி.
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்துக் கொண்டிருக்க முதல்வருக்கு நேரமில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் கனிமொழி பேசுகையில் "ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரென்று நமக்கு நன்றாகத் தெரியும். ஸ்டிக்கர் ஒட்டி, உலகம் முழுவதும் பெருமை பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி.

முதல்வருக்கு இருக்கிற வேலைப் பளுவுக்கிடையே, இவருடனெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியில் எத்தனையோ இருப்பார்கள், அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்துக் கொள்ளட்டும். அதையும் மீறி, கேள்விகள் இருந்தால் முதல்வர் பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.

தன்னுடன் நேருக்கு நேர் மேடையேறி விவாதிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியின் சவாலை விமர்சித்து கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

முன்னதாக, பேரவையில் முதல்வரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்பவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்தார்.

உங்களுடன் விவாதிப்பதற்கெல்லாம் நேரமில்லை: இபிஎஸ் சவாலை விமர்சித்த கனிமொழி எம்.பி.
கேரளம்: முதல் ஜென் ஸீ நகராட்சித் தலைவர்!
Summary

CM Stalin don't time to debate with EPS: Kanimozhi criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com