‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் வாரம் இரு நாள்கள் நடைபெறும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இனி வாரம் இரு நாள்கள் முகாம்கள் நடைபெறும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோப்பிலிருந்து படம்
Updated on
1 min read

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இனி வாரம் இரு நாள்கள் முகாம்கள் நடைபெறும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) அறிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆக. 2-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். அதன் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, இன்றும் (டிச. 27) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மாநிலந்தோறும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இந்தநிலையில், இனி வரும் வாரங்களில் இந்த முகாம்கள் கூடுதலாக வியாழக்கிழமைகளிலும் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) தெரிவித்தார்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டதில், அவற்றின் மூலம் 12.36 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Summary

The 'Stalin's Health Protection' scheme will now be conducted two days a week: Minister Ma. Subramanian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com