சென்னை முதலியார்கள் சங்க 22 ஆம் ஆண்டு விழா!

சென்னை முதலியார்கள் சங்க 22 ஆம் ஆண்டு விழா பற்றி...
22nd annual celebration of Chennai Mudhaliar Association
விழாவில் ஏ.சி. சண்முகம் பேசியபோது...
Updated on
1 min read

மத்திய சென்னை முதலியார்கள் சங்கம், அகமுடையர், செங்குந்தர், பிள்ளைமார், வேளாளர் கூட்டமைப்புச் சங்கத்தின் 22 ஆம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை சூளைமேட்டில் நேற்று (டிச. 28) நடைபெற்ற இந்த விழாவில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் ஏ.சி. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் புதிய நீதிக் கட்சியின் செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்த விழாவில் ஏழை பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள், மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்குதல்...
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்...

மேலும் கண் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இதில் மக்கள் பலரும் பங்கேற்று பயன்பெற்றனர்.

சிறப்பு மருத்துவ முகாம்..
சிறப்பு மருத்துவ முகாம்..

சங்கத்தின் தலைவர் டி. சிவக்குமார், செயலாளர் ஜி. முருகப்பெருமான், துணைச் செயலாளர் எஸ். ஜெயபாலன், பொருளாளர் ஜி. சம்பத், இணைத் தலைவர் வி. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துப் பேசினர்.

Summary

22nd annual celebration of Central Chennai Mudhaliar Association

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com