Ramadoss game is only just beginning; Srikanthi speech against anbumani
ஸ்ரீகாந்தி

அன்புமணி செய்தது பச்சைத் துரோகம்; ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்: ஸ்ரீகாந்தி

சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியது...
Published on

சேலம் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, அன்புமணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

சேலத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

"துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம், 2025ல் பெரும் பலத்துடன் கோட்டைக்குள் நுழைவோம்" என பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கூற, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்ரீகாந்தி, "பாமகவை வளர்த்தெடுத்த ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரித்துவிட்டு யாருக்காக நீங்கள் (அன்புமணி) போராடப் போகிறீர்கள்? ராமதாஸை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

மருத்துவர் பட்டமும் எம்பி, அமைச்சர் பதவிகளும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். தலைவரை கண்டுகொள்ளாமல் பாமகவுக்கு இனி நான்தான் தலைவர் என்று கூறினால் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமெனால் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

திமுக கைக்கூலி என்று எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்.

பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார்.

ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். இனிமேல் குறுக்கே பேச யாரும் இல்லை, காலை வாரிவிடவும் யாரும் இல்லை" என்று பேசினார்.

அதேபோல கூட்டத்தில் பேசிய ஜி.கே. மணி, "அன்புமணி இனி அரசியல் செய்ய முடியாது அவர் அரசியலைவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம். பாமக சாதாரணமாக உருவான கட்சி அல்ல. கட்சியை இனி யாராலும் அபகரிக்க முடியாது" என்று பேசினார்.

முன்னதாக, பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பு ஸ்ரீகாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

Summary

Ramadoss game is only just beginning; Srikanthi speech against anbumani

Ramadoss game is only just beginning; Srikanthi speech against anbumani
தலைவராக ராமதாஸ் தேர்வு! கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம்! - பாமக கூட்டத்தில் தீர்மானம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com