திமுக மகளிர் மாநாட்டுக்கு வரும் பெண்களுக்கான சிற்றுண்டி மெனு!

மாநாட்டுக்கு வரும் பெண்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி குறித்து...
திமுக மகளிர் மாநாடு நடைபெறும் இடம்.
திமுக மகளிர் மாநாடு நடைபெறும் இடம்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று(டிச. 29) நடைபெறவுள்ள திமுக மகளிர் மாநாட்டுக்கு வரும் பெண்களுக்கு சிற்றுண்டி தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.

மாநாட்டிற்கு வரும் பெண்களுக்கு ரஸ்க், மிக்சர், இனிப்பு, குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் மேற்கு மண்டல மாநாடு இன்று (டிச.29) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகிக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் நீலகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிரணி நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த 6 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பூத்துக்கும் 10 முதல் 15 பெண் நிர்வாகிகள் வீதம் 12,380 பூத்துகளில் உள்ள சுமாா் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதற்காக பூத் வாரியாக பெண் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திமுக மகளிர் அணியினர், தொண்டர்கள் பங்கேற்க இருப்பதால் இருக்கை, வாகன நிறுத்தம், உணவு, சிற்றுண்டி, தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி இந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Summary

Snack packages will be provided to the women attending the DMK women's conference, which is being held today (Dec. 29) in Palladam, Tiruppur district.

திமுக மகளிர் மாநாடு நடைபெறும் இடம்.
'வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற விளம்பரப் பதாகைகளை பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com