

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வந்தார்.
கம்பன் கலையரங்கில் அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றப் பிறகு முதல்முறையாக அவர் புதுச்சேரிக்கு வருகை புரிந்ததால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அங்கு நடைபெற்ற விழாவில் குமரகுருபள்ளம் பகுதியில் ரூ.45.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளைப் பயனாளிக்கு அவர் ஒப்படைத்தார்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.