எஸ்ஐஆர்: விளக்கம் கேட்டு 12.43 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவம் தொடர்பாக விளக்கம் கேட்டு 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்.
SIR: EC sent Notices to 12.43 lakh voters seeking explanation
கோப்புப் படம் ENS
Updated on
1 min read

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி அலுவலர்களால் வினியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

இதில், எஸ்ஐஆருக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி வருகிற ஜன. 18 வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்...
மாவட்டவாரியாக விவரம்...

அதிகபட்சமாக சென்னையில் 2.37 லட்சம் பேர், திருவள்ளூரில் 1.85 லட்சம் பேர், சென்னையில் 2.37 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது எஸ்ஐஆர் படிவத்தில் 2002, 2005ல் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் குறித்த விவரங்களை தராத வாக்காளர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் வாக்குச்சாவடி அலுவரைத் தொடர்புகொண்டு வாக்குச்சாவடி அதிகாரியிடம் நேரில் ஆஜராக வேண்டும்.

Summary

SIR: EC sent Notices to 12.43 lakh voters seeking explanation

SIR: EC sent Notices to 12.43 lakh voters seeking explanation
2025 அறிமுகம்: எஸ்ஐஆர் புதிய நடைமுறையா? சாதகமா, பாதகமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com