

வைகுந்த ஏகாதசியையொட்டி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந் தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை 5.50 மணிக்கு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் 23-ஆவது திருத்தலமாக தில்லை திருச் சித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் வைகுந்த ஏகாதசியை யொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவிந் தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.
பின்னர், உற்வசர் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத் தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.