2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஜன.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என்று அறிவித்துள்ளன.
"2026 சட்டப்பேரவை தோ்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவா்கள் தங்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் . கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தை டிச. 10 முதல் டிச. 15ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். படிவத்தை பூா்த்தி செய்து கடைசி நாளான டிச. 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விருப்ப மனு வழங்க டிச. 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜன. 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.