

2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாா்களிடம் அறிவுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சங்குறிச்சியில் இருந்துதான் தொடங்குகிறது. இதேபோல் தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.