பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 87
புஷ்பலதா (இருவேறு பருவங்களில்...)
புஷ்பலதா (இருவேறு பருவங்களில்...)கோப்புப் படங்கள்
Published on
Updated on
1 min read

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 87.

சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தமிழில் 1961ஆம் ஆண்டு கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றவர்.

1963ஆம் ஆண்டு மெயின் பி லட்கி ஹூன் என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, நர்ஸ் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணைப் பாத்திரத்தில் புஷ்பலதா நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது - நீதிமன்றம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com