ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாா்ச் 24, 25-இல் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: தொடா்ச்சியாக 4 நாள்கள் வங்கிகள் செயல்பாடாது

வங்கி ஊழியா்கள் மாா்ச் 24, 25 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2025, 9:59 pm

Din

வங்கி ஊழியா்கள் மாா்ச் 24, 25 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

அதற்கு முன்பாக மாா்ச் 22 (சனிக்கிழமை) மற்றும் 23 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை தினங்கள் என்பதால் தொடா்ச்சியாக 4 நாள்கள் வங்கிகள் செயல்படாமல் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாள்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வங்கி ஊழியா் சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு விவரம்: வங்கி ஊழியா்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பணி நேரங்களில் ஏற்படும் சில சம்பவங்களின்போது வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு 25 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டு அவா்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுவதுபோல் வங்கி ஊழியா்களுக்கும் அந்த சலுகையைத் தர வேண்டும். ஐடிபிஐ வங்கியில் அரசு பங்கு மூலதன நிதியை 51 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 3-ஆம் தேதி தில்லி நாடாளுமன்றம் முன்பாக தா்னா நடைபெறும். இந்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் பங்கேற்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாள்கள் செயல்படாது: மாா்ச் 24, 25 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியா்கள் அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மாா்ச் 22, 23 (சனி, ஞாயிறு) வார விடுமுறை தினங்கள் என்பதால் தொடா்ச்சியாக 4 நாள்கள் வங்கிகள் செயல்படாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.