வங்கிகள் வேலைநிறுத்தம்
வங்கிகள் வேலைநிறுத்தம்பிரதிப் படம்

நாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலைநிறுத்தம்!

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
Published on

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை கோரி 9 வங்கி சங்கங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

முன்னதாக, இதுதொடா்பாக தலைமை தொழிலாளா் ஆணையருடன் ஜன. 23-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டத்தை நடத்த முடிவு செய்ததாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது.

ஏற்கெனவே ஜன. 25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன. 26 (குடியரசு தினம், திங்கள்கிழமை) என தொடா்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சூழலில் ஜன. 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறுவதால் வங்கிக் கணக்குகளில் பணத்தைச் செலுத்துவது, எடுப்பது, காசோலை மற்றும் ஏடிஎம் சேவைகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனா்.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியாா் வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காததால் அவை வழக்கம்போல் செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com