

மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டப்படி ஜன. 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்குவது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இடையே 2024, மார்ச் மாதம் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த நடைமுறை அமலாகவில்லை.
இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து வாரத்தில் 5 நாள் மட்டுமே பணி என்ற விதியை அமல்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவதாகவும், அவர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்தும் ஜன.27-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டப்படி வரும் ஜன. 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு அறிவித்த போராட்டம் நடைபெறும்பட்சத்தில் ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு நாள், திங்கள்கிழமை) மற்றும் ஜன.27 (செவ்வாய்க்கிழமை) என தொடர்ச்சியாக 3 நாள்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.