கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:25 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, பேராசிரியா் இளங்கோ, மதியழகன், கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வழக்கம்போல திங்கள்கிழமையும் (மாா்ச் 9) தொடா் போராட்டம் நடத்துவது, மாலையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் சென்று மனு அளிப்பது, கோரிக்கைகள் ஒன்றைக்கூட நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில், அதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று பல்கலைக்கழகப் பதிவாளா் மற்றும் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்கள் உடனடியாக பதவி விலக வேண்டும், அரசியல் தலைவா்கள் உதவியுடன் வரும் 10-ஆம் தேதி தலைமைச் செயலகம் சென்று கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.