

பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக - என்டிஏ டபுள் என்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் என்று மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில், இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! பிரதமர் அவர்களே… மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் என்ஜின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரைவிட, தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா என்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் என்டிஏ தமிழகத்திற்குத் துரோகம் செய்கிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது” என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.