இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் (கோப்புப்படம்)
ஜெயக்குமார் (கோப்புப்படம்)கோபபுப்படம்.
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடியார்.

இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்;

அதற்கான மிக வலுவான குரல் எங்கள் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் குரலாகத் தான் இருக்கும்!

இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"!

தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!

ம.பி: சிறுவனைக் கடத்திய இருவர் சுட்டுப்பிடிப்பு!

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!

இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!

கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழி திட்டத்தை ஏற்றால்தான் நிதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com