விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தாண்டில் அணிகள் இணைவது உறுதி: சசிகலா

இந்த ஆண்டில் தமிழக அரசியலில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும் என்று சசிகலா கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 6:47 am

இந்த ஆண்டில் தமிழக அரசியலில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும் என்று அமமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுடன் பேசிய சசிகலா,

'2026-ல் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும். கண்டிப்பாக அணிகள் இணையும்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டபோது மாநில மகளிர் ஆணையம் ஏன் அங்கு செல்லவில்லை?

முதல் தகவல் அறிக்கை வெளியானதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுகிறார். வரும் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.